×

திரைப்பட தணிக்கை சான்றிதழை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A என 5 வகைகளாக பிரித்து வழங்கும் ஒளிப்பதிவு சட்ட மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : தற்போது U, U/A, A என 3 பிரிவுகளாக வழங்கப்படும் திரைப்பட தணிக்கை சான்றிதழை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A என 5 வகைகளாக பிரித்து வழங்கும் புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு திரைப்படம் தணிக்கை குழுவிடம் சான்று பெற்று திரையரங்கில் வெளியாகி விட்டால் அதனை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய முடியாது. இதனை மாற்றும் வகையில் 2021ம் ஆண்டு திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவோ பொது அமைதியை சீர்குலைப்பதாகவோ புகார் வந்தால் திரைப்படத்தை மறு ஆய்வு செய்யுமாறு தணிக்கைக்குழு தலைவருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட முடியும். அறிமுக நிலையிலேயே இந்த சட்ட முன்வரைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்பட திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்புவதை தடுக்கும் அம்சங்களும் இந்த மசோதாவில் உள்ளன. தற்போது U, U/A, A என 3 பிரிவுகளாக வழங்கப்படும் திரைப்பட தணிக்கை சான்றிதழை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A என 5 வகைகளாக பிரித்து வழங்கவும் இந்த மசோதா வழி வகை செய்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற உள்ளதாக ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

The post திரைப்பட தணிக்கை சான்றிதழை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A என 5 வகைகளாக பிரித்து வழங்கும் ஒளிப்பதிவு சட்ட மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Delhi ,Dinakaran ,
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...