×

வி.பி.சிங்கிற்கு சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்; உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர் வி.பி.சிங். வி.பி.சிங்குக்கு திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன். பெரியாரை உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார். கலைஞரை சொந்த சகோதரரை போல மதித்தார் வி.பி.சிங். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கிடையாது என்ற ஒன்றிய அரசை 27% இடஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டது ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால்தான். வி.பி.சிங். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் ஆனாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங். தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தவர் வி.பி.சிங். கொள்கைக்காக லட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று வி.பி.சிங் பாராட்டினார். வி.பி.சிங் என்னை பாராட்டியது என் வாழ்நாளில் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.

The post வி.பி.சிங்கிற்கு சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : VP ,Chennai ,Chief Minister ,MK Stalin ,M. K. Stalin ,VP Singh ,Assembly ,M.K.Stal ,Legislative Assembly ,
× RELATED நாட்டில் பாஜகவின் செல்வாக்கு...