×

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 5ம் தேதி ஒரு சவரன் ரூ.45,520க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய சாதனையை படைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 வரை குறைந்தது. 11ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது.

அன்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,040க்கு விற்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,680க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,440க்கும் விற்கப்பட்டது. தமிழ்ப்புத்தாண்டான கடந்த 14ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. தொடர்ந்து 15ம் தேதி அதிரடியாக சவரனுக்கு 560 குறைந்து ரூ.45200க்கு விற்பனையானது. தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாத நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆக விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,650க்கும் சவரன் ரூ.45,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கு விற்பனை ஆகிறது.

The post மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200க்கு விற்பனை..! appeared first on Dinakaran.

Tags : SHAVER ,Chennai ,Sawaran ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு