×

மயிலாடுதுறை அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

மயிலாடுதுறை,ஏப்.20: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இயற்பியல் துறையும், தமிழ்நாடு உயர் கல்வி துறையும் (TANSCHE) இணைந்து இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்கத்தின் முதல் நாளான நேற்று முதல்வர் அறவாழி தலைமை தாங்கி பேசினார். இயற்பியல் துறை தலைவர் பென்னி அன்புராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலை கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், பேராசிரியருமான ராக்கப்பன், கலந்து கொண்டு இயற்கையோடு ஒன்றிய இயற்பியல் மற்றும் ஒன்றிய அறிவியல் என்ற தலைப்பில் பேசினார். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை இயற்பியல் துறை மூன்றாமாண்டு மாணவிகள் வினோதினி, மனோ, புரிதிகா, சுவேதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

The post மயிலாடுதுறை அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : National Seminar ,Mayiladududuram Government College ,Mayaladududurai ,Tamil Nadu Higher Education Department ,TANSCHE ,Department of Physics ,Tamil Nadu High Education Department ,Mayaladududura Government College ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்