×

ஆக்கூர் ஊராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

செம்பனார்கோயில், ஏப்.20: செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் முகாமில் தாசில்தார் காந்திமதி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கண்மணி, தனி வட்டாட்சியர் சுந்தரி, துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள்குறைதீர் முகாமில் ஆக்கூர், பண்டாரவாடை, உடையவர் கோவில்பத்து, மடப்புரம், முடிகண்டநல்லூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை தாசில்தாரிடம் கொடுத்தனர். இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆக்கூர் ஊராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Grievance Redressal Camp ,Akure Panchayat ,Sembanarkoil ,Tahsildar Gandhimati ,Akur ,Mayiladuthurai district ,grievance redressal ,Akur panchayat ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை