×

வாசிப்பு திறனை அதிகரிக்க நூலக நண்பர்கள் திட்டம்

திருப்பரங்குன்றம், ஏப். 20: வாசிப்பு திறனை அதிகரிக்க நூலக நண்பர்கள் திட்டம் துவங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மேல ரத விதியில் தமிழ்நாடு அரசு நூலகத்துறையின் கீழ் செயல்படும் கிளை நூலகம் செயலபடுகிறது. இந்த நூலகத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி வாசிப்பு திறனை மேம்படுத்தவும் மேலும் நூலகம் வந்து படிக்க முடியாத பணியாளர்கள், முதியோர்கள் ஆகியோரின் வசதிக்காக நூலக நண்பர்கள் திட்டம் துவங்கப்பட்டது.


இதன் மூலம் நூல்களை அரசு அலுவலகங்கள் மற்றும் இல்லங்களுக்கு பைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதனைத்தொடர்ந்து நூலக நண்பர்கள் திட்டம் மூலம் முதல் நூலை காவல் துணை ஆணையர் ஆறுமுகச்சாமியிடம் திருப்பரங்குன்றம் நூலகர் வெங்கட வேல்பாண்டி வழங்கினார். திருப்பரங்குன்றம் நூலகம் மூலம் இப்பகுதியில் உள்ள அரசு அலுவலக மருத்துவ பணியாளர்கள், தபால் அலுவலக பணியாளர்கள் கோயில் அறநிலை துறை அலுவலக பணியாளர்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு நூல்கள் கொண்டு செல்லப்படும்.

The post வாசிப்பு திறனை அதிகரிக்க நூலக நண்பர்கள் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupparankunam ,Tamil Nadu ,Thirupparangunnam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...