×

கணவர் குடும்பத்தாரிடமிருந்துசகோதரிக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டு வாலிபர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம், ஏப். 20: கணவர் குடும்பத்தாரிடமிருந்து சகோதரிக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டு வாலிபர் நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று வாலிபர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் உள்ளே சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து தாலுகா காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் அருகே ஆசூரைச் சேர்ந்த கவியரசு(38). என்பது தெரியவந்தது.

‘தொடர்ந்து தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து அவர் கூறுகையில், எனது சகோதரி இளவரசிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருள் என்பவருடன் திருமணம் நடந்தது. சில மாதங்களில் அவர் உயிரிழந்துவிட்டார். அவருக்கு சேர வேண்டிய சொத்தினை அருளுடைய சகோதரர் அபகரித்து வைத்து எனது சகோதரிக்கு தராமல் உள்ளார். இதனால் தனிமையில், வறுமையில் வசிக்கும் எனது சகோதரி கஷ்டப்பட்டு வருகிறார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இளவரசிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் சொத்தை பிரித்துக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

The post கணவர் குடும்பத்தாரிடமிருந்து
சகோதரிக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டு வாலிபர் தீக்குளிக்க முயற்சி
appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது