×

டூவீலர் மோதி மூதாட்டி பலிவாலிபருக்கு 2 ஆண்டு சிறை

சங்ககிரி, ஏப்.20: நாமக்கல் மாவட்டம், படைவீடு கிராமம் கவுண்டனூரை சேர்ந்தவர் பாப்பா(95). இவர் கடந்த 2019 ஜனவரி 10ம் தேதி, சங்ககிரி போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல ஐசிஎல் பிள்ளையார் கோயில் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, நாமக்கல் மாவட்டம் படைவீடு கிராமம் கணக்கன்காட்டை சேர்ந்த பாலகுமாரன் (22) என்பவர் ஓட்டிச்சென்ற டூவீலர், மூதாட்டி மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த மூதாட்டி பாப்பா, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குபதிந்து பாலகுமாரனை கைது செய்து, சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்-1ல் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு நேற்று, விபத்தை ஏற்படுத்தி மூதாட்டி பாப்பா உயிரிழக்க காரணமான பாலகுமாரனுக்கு 2 ஆண்டு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ₹2ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post டூவீலர் மோதி மூதாட்டி பலி
வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Kauntanur, Padavidu village, ,Namakkal district ,
× RELATED சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ வழக்கு