×

₹29 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

மல்லசமுத்திரம், ஏப்.20: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளை மல்லசமுத்திரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், 1200 மூட்டைகள் விற்பனைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் டி.சி.எச் ரகம் ₹7680 முதல் ₹8520 வரையிலும், பி.டி ரகம் ₹7320 முதல் ₹8499 வரையிலும், கொட்டு ரகம் ₹3750 முதல் ₹5850 வரை என ₹29 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தியை கொள்முதல் செய்ய கோவை, அவிநாசி, ஈரோடு, சேலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

The post ₹29 லட்சத்திற்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்