×

பாளையில் புதிய மார்க்கெட் கடைகள் கட்டுமானப் பணிமேயர் பி.எம்.சரவணன் நேரில் ஆய்வு

நெல்லை, ஏப். 20: பாளையில் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகளை மேயர் பி.எம்சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்ைல மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பாளை மார்க்கெட் முழுமையாக இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பாளை மார்க்கெட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு, பாளை ஜவஹர் மைதானம் மற்றும் பழைய காவலர் குடியிருப்பு காலி மைதானத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமான பணிகள் மற்றும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கழிவறை கட்டுமான பணிகள் ஆகியவற்றை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பாளை. மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து, கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உமாபதி சிவன், சுந்தர், நித்தியபாலையா மற்றும் குணா, இந்திராமணி, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பாளையில் புதிய மார்க்கெட் கடைகள் கட்டுமானப் பணி
மேயர் பி.எம்.சரவணன் நேரில் ஆய்வு
appeared first on Dinakaran.

Tags : P. M. Saravanan ,Palai ,Nellie ,Mayor ,B.M.Saravanan ,Nelayla… ,P.M.Saravanan ,Dinakaran ,
× RELATED பாளை ராஜகோபால சுவாமி கோயில் வருஷாபிஷேகம்