×

₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார மேற்பார்வையாளர் கைதுதுணை இயக்குனரிடம் விசாரணையால் பரபரப்புவேலூரில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்க

வேலூர், ஏப்.20: வேலூரில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்க ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார சுகாதார மேற்பார்வையாளரை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் பில்டர்பெட் சாலையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் 3ம் ஆண்டு முடிவில் மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மாதம் பயிற்சி பெற வேண்டும் என்றால் வேலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனுமதி கடிதம் வழங்க வேண்டும். அதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்யுமாறு துணை இயக்குனர் பானுமதி, அணைக்கட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு (57) அறிவுறுத்தி உள்ளார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி அந்த தனியார் நர்சிங் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ₹10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கல்லூரி முதல்வர் சரண்யா இதுகுறித்து வேலூர் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். நேற்று மாலை லஞ்சம் பணம் வாங்க நர்சிங் கல்லூரிக்கு கிருஷ்ணமூர்த்தி வந்துள்ளார். அப்போது பணத்தை வாங்கிய கிருஷ்ணமூர்த்தியை அங்கு மறைந்து இருந்த விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதியிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார மேற்பார்வையாளர் கைது
துணை இயக்குனரிடம் விசாரணையால் பரபரப்பு
வேலூரில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்க
appeared first on Dinakaran.

Tags : Director of ,Arrest ,Private Nursing College ,Vibrapapuvelur ,Vellore ,Dinakaran ,Prabapapuvelur ,
× RELATED புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடைவிடுமுறை..!!