×

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ரூ.20.92 கோடியில் அனைத்து வசதியுடன் கூடிய வகுப்பறை, நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கலைப்பண்பாட்டு துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:

  • தமிழ்நாட்டின் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும், அவற்றை வளர்க்கவும் 200 அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கலை பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும்.
  • சென்னை மற்றும் திருவையாறு அரசு இசை கல்லூரிகளில் தவில் மற்றும் நாதசுரம் பிரிவுகளில் ரூ.18 லட்சம் செலவில் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.
  • சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி, நூற்றாண்டு கடந்த பழமையான கட்டிடத்திலும், 50 ஆண்டுகளுக்கு மேலான பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள சில கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின் வரைமுறைப்படி பதிப்போதியம், துகிலியல், கலை வரலாறு ஆகிய பிரிவுகளுக்கு வகுப்புகளும் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமும் கட்டுவதற்கு தொடராச் செலவினமாக ரூ.20.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அரசு கவின் கலைக்கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3 புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டப்படும்.
  • கோயமுத்தூர் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் ரூ.1.97 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திரையரங்கம் ரூ.50 லட்சம் செலவில் நவீன முறையில் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கலைப்படைப்புகள் ரூ.20 லட்சம் செலவில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்படும்.
  • தமிழ்நாடு இயல் இசை மன்றத்தின் வாயிலாக கலாசார பரிமாற்ற திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.
  • தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் நல்கை தொகையினை உயர்த்திடவும், அலுவலகத்திற்கான தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்திடவும் ரூ.1.09 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ரூ.20.92 கோடியில் அனைத்து வசதியுடன் கூடிய வகுப்பறை, நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Govt Gavin Arts College ,Chennai ,Minister Thangam ,Southern Government ,South ,Art Department ,Chennai Government Gavin Arts College ,Minister Thangam South ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும்...