×

பன்றியை வேட்டையாடிய மூன்று வக்கீல்கள் கைது: துப்பாக்கி, கார், பைக் பறிமுதல்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சரகத்துக்குட்பட்ட நெல்லிதோப்பு பகுதியில் சிலர் முள்ளம்பன்றி வேட்டையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு வனத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, முள்ளம்பன்றி வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஜோஸ் (47), ஜான் பெர்லின் (35), நாகர்கோவில் சுப்பிரமணியம் (58), பெருமாள்பிள்ளை (58), இளமுருகு மார்த்தாண்டம் என்பது தெரியவந்தது.

இதில் சுப்பிரமணியன், பெருமாள் பிள்ளை, இளமுருகு மார்த்தாண்டன் ஆகியோர் வக்கீல்கள் ஆவர். 5 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு பதிந்து வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து அனுமதியில்லாத துப்பாக்கி, கார், பைக், கத்தி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வக்கீல்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, வக்கீல்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post பன்றியை வேட்டையாடிய மூன்று வக்கீல்கள் கைது: துப்பாக்கி, கார், பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nellithoppu ,Buthapandi forest reserve ,Kumari district ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் மழைநீர் வடிகால் இணைக்கப்படுமா?