×

புதுச்சேரி சட்டசபை திடீர் முற்றுகை

புதுச்சேரி சட்டசபை திடீர் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் சன்னியாசித்தோப்பு அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மயான கொள்ளை திருவிழா நடந்து வருகிறது. தற்போது அந்த இடத்தை சிலர் அபகரிக்க பார்ப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்தார், ஆலய நிர்வாகிகள் நேற்று சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சட்டசபை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலி பத்திர கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி கோஷமிட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் மீனவ பஞ்சாயத்தார் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்.

The post புதுச்சேரி சட்டசபை திடீர் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Angalaparameshwari Amman Temple ,Puducherry Vambakeerapalayam ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...