×

ஜப்பான் இளைஞர் ஆவேசம்: தேர்தலில் போட்டியிட முடியாததால் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு தாக்குதல்

டோக்கியோ: தேர்தலில் போட்டியிட முடியாத வெறுப்பினால் ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடந்த சனிக்கிழமை வகாயமா நகரில் உள்ள சைகாசாகி துறைமுகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, 24 வயதான இளைஞர் ஒருவர் பைப் வெடிகுண்டை வீசினார். இது பிரதமரின் அருகில் விழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்ததில், வேலையில்லாத அவர் வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடக்க இருந்த மேலவை தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் ஆனால் அதற்கு வயது வரம்பு 30 என்றும் அதற்கு ரூ.18.29 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்ற விதிகளினால் தன்னால் போட்டியிட முடியவில்லை என்று அவன் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளான். இது தொடர்பாக அவன் கோபே மாவட்ட நீதிமன்றத்தில் போட்டியிட அனுமதிக்கும்படி கோரி கடந்தாண்டு ஜூன் மாதம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் கூறியுள்ளான். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, அவன் தேர்தலில் போட்டியிட முடியாத விரக்தியில் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீசி இருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post ஜப்பான் இளைஞர் ஆவேசம்: தேர்தலில் போட்டியிட முடியாததால் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் புல்லட் ரயிலில் மல்யுத்தப் போட்டியை கண்டு ரசித்த பயணிகள்..!!