×

ஹூமாயுன் மகால் பாரம்பரிய கட்டிடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம்

சட்டப்பேரவையில் அருங்காட்சியகத் துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:

  • சென்னை அரசு அருங்காட்சியகத்தின் வளர்கலை கூடம், மானுடவியல் கூடம், சிறுவர் அருங்காட்சியகம் மற்றும் பாந்தியன் கட்டிடங்கள் ரூ.10 கோடி செலவில் பழுதுபார்த்து சீரமைக்கப்படும்.
  • அனைத்து அருங்காட்சியங்களிலும் தகவல் அமைப்பு ரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்படும்.
  • வேலூர் அரசு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கான வசதிகளுடனும் நவீன காட்சியமைப்பு மற்றும் ஊடாடும் தொழில்நுட்பங்களுடனும் ரூ.1 கோடி செவில் மேம்படுத்தப்படும்.
  • மதுரை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிற்ப பூங்கா மற்றும் விலங்கியல் காட்சி கூடங்கள் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.
  • கடலூர் அரசு அருங்காட்சியகம் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.
  • சென்னை ஹுமாயுன் மகால் பாரம்பரிய கட்டிடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தொல்லியல்துறை:

  • தமிழ்நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபுகளை காலவரிசைப்படி அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று நிலவரைபடத் தொகுதி தயாரிக்கும் பணிகள் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமும் சுற்றுலா தலமுமாகிய மதுரை திருமலை நாயகர் அரண்மனையில் வேலி மற்றும் புல்வெளித்தளம் அமைக்கும் பணிகள் ரூ.68.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

The post ஹூமாயுன் மகால் பாரம்பரிய கட்டிடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Museum ,Humayun Mahal Heritage Building ,Minister ,Thangam South ,Museum Department ,Department of Archaeology ,Independence ,Day Museum ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...