×

ரூ.5 கோடியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் முட்டுக்காட்டில் தீவுப்பகுதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான சுற்றுலா துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பதிலளித்தார்.
மேலும், 22 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

  • தனுஷ்கோடி பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • ஏற்காடு நிலச்சீரமைப்பு காட்சிமுனை உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • பழங்கால சமணத் தலங்களில் ஒன்றான சித்தனவாசல் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • கன்னியாகுமரி மாத்தூர் தொட்டிப் பாலம் பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
  • முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப் பகுதியை, கடற்கரைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் சாகச விளையாட்டுகள், நடைபாதைகள், பறவைகளை பார்வையிட மாடம் மற்றும் இதர வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • மன்னார்குடியில் உள்ள அரித்ரா நதி கோயில் குளம், படகு இல்லம் சுற்றுலாத் தலமாக ரூ.50 லட்சத்தில் தொடங்கப்படும்.
  • மாமல்லபுரம் கடற்கரை ஓய்வு வளாகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.20 கோடியில் அதிநவீன மாநாட்டு அரங்கம் கட்டப்படும்.
  • மதுரை அலகு 2ல் கூடுதல் விருந்து மண்டபங்கள் ரூ.7 கோடியில் கட்டப்படும்.
  • திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்க ரூ.2.80 கோடியில் 43 இருக்கைகளுடன் கூடிய 2 குளிர்சாதன பேருந்துகள் வாங்கப்படும்.
  • ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்த ஒலி, ஒளி காட்சி பொது தனியார் பங்களிப்பில் அமைக்கப்படும்.
  • நீலகிரி தேவாலா பகுதியில், சாகச விளையாட்டுகள், மலர் பூங்கா போன்ற வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
  • ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள படகு இல்லங்களில் மிதவை உணவகங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ரூ.15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • கன்னியாகுமரியை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை ரூ.1 கோடியில் தயாரிக்கப்படும்.

The post ரூ.5 கோடியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் முட்டுக்காட்டில் தீவுப்பகுதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Island ,Muttukkad ,Minister ,Ramachandran ,Tourism Minister ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED ராமேஸ்வரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை