×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: 1 கிலோ மல்லி ரூ.400க்கு விற்பனை

சென்னை: நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி, காட்டுமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, முல்லை போன்றவை ரூ.400க்கு விற்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்மபுரி, ஒசூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வேன்கள் மூலம் தினசரி பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி, காட்டுமல்லி, ஜாதிமல்லி, முல்லை, கனகாம்புரம் ஆகியவை ரூ.400க்கும், ஐஸ் மல்லி ரூ.300க்கும், அரளிப் பூ ரூ.250க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.80க்கும், சாக்லேட் ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாகக்குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, நேற்று முகூர்த்தநாள் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: 1 கிலோ மல்லி ரூ.400க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,CHENNAI ,Mukurtha day ,Koyambedu ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...