×

2047ல் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற இலக்கு: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, ‘‘போதைப்பொருளை உட் கொள்பவர்கள் பலியாகி இருப்பதால் அதனை வர்த்தகம் செய்பவர்களே முக்கிய குற்றவாளிகள். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நாம் இரக்கமற்ற அணுகுமுறையை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து மாநில அரசுகளும் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டை அடையும்போது போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்றார்.

The post 2047ல் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற இலக்கு: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Amit Shah ,New Delhi ,Drug Prevention Taskforce of States and Union Territories ,Delhi ,Interior Minister ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!