×

தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளப்பதிவு: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வு, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகள், இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாமக 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உறுதிமொழிகளைப் பெற்றுக் கொடுத்தது. பாமக, தமிழ்மொழியில் போட்டித் தேர்வு கனவு நனவானதில் மகிழ்ச்சி. தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும். அதற்காக தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஒன்றிய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக பாமக தொடர்ந்து போராடும்; வெற்றி பெறும்.

The post தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union ,Ramadoss ,Chennai ,BAMA ,Ramadas ,Union government ,Ramadas' ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...