×

சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: அமைச்சர்கள் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் உரிமையாளர் பரத்சந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்படுதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன. கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை ஊழியர்கள் பலர் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது.

ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பயங்கர சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து எஸ்பிளனேடு காவல்நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி தீயணைப்பு வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தேசியபேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியினை அமைச்சர்கள், கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி மேயர், மற்றும் ஆணையர் ஆகியோர் நீரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் பரத்சந்திரன் மீது எஸ்பிளனேடு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: அமைச்சர்கள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Parimunam ,Paradshandran ,Chennai Barimuni ,Parimuna ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...