×

இந்திய கலாசார அடையாளத்தை பின்பற்றி கைத்தறி சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒடிசா பெண்: இங்கிலாந்தில் நடந்த நிகழ்வில் அபாரம்

மான்செஸ்டர்: இந்திய கலாசார அடையாளத்தை பின்பற்றி கைத்தறி சேலை அணிந்து கொண்டு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற ஒடியா பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒடியா பெண் மதுஸ்மிதா ஜெனா தாஸ் (41) என்பவர், மான்செஸ்டரில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். அவர் சம்பல்புரி கைத்தறி புடவை அணிந்து கொண்டு மாரத்தான் போட்டியில் ஓடினார். கிட்டத்தட்ட 42.5 கிமீ தூரம் ஓடிய மாரத்தான் போட்டியில், 4 மணி நேரம் 50 நிமிடங்களில் மாரத்தான் ஓட்டத்தை முடித்து வெற்றிப் பெற்றார்.

அழகான சிவப்பு நிற புடவை மற்றும் ஆரஞ்சு நிற ஸ்னீக்கர்களை அணிந்திருந்த மதுஸ்மிதா ஜெனா தாஸ் முயற்சியை பலரும் பாராட்டினர். இதுதொடர்பாக இந்திய வம்சாவளி ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் ஒடியா பெண்ணான மதுஸ்மிதா ஜெனா தாஸ், மான்செஸ்டர் மராத்தான்-2023ல் சம்பல்புரி கைத்தறி சேலை அணிந்து ஓடினார். அவரது ஆர்வத்தை பாராட்டுகிறேன். பழங்குடியின மற்றும் நாட்டுப்புற சமூக மக்களின் தனித்துவமான கலாசார அடையாளத்தை ெவளிப்படுத்தி உள்ளார். கடினமான இந்த காலகட்டத்தில், அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post இந்திய கலாசார அடையாளத்தை பின்பற்றி கைத்தறி சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒடிசா பெண்: இங்கிலாந்தில் நடந்த நிகழ்வில் அபாரம் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Abaram ,UK ,Manchester ,Odia ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து