×

கர்நாடகாவில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தார்வாட் மாவட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி கொலை..!!

கர்நாடகா: கர்நாடகாவில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தார்வாட் மாவட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி மர்ம நபர்களால் கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தார்வாட் மாவட்ட யுவமோட்சா துணை தலைவர் பிரவீன் கமர் தான் கொல்லப்பட்டவர் ஆவார். தார்வாட் தாலுகா கோட்டூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு நேற்றிரவு சென்றபோது மர்மநபர்கள் அவரை வழிமறித்து படுகொலை செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அதே ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் குடித்துவிட்டு தகராறு செய்தவர்களை பிரவீன் கமர் தட்டி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. படுகாயமடைந்த பிரவீன் கமர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 3 வரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பாஜகவில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ்யில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் போட்டியிடும் தொகுதியை உள்ளடக்கிய தார்வாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

The post கர்நாடகாவில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தார்வாட் மாவட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Dharwad District BJP ,Team ,Assembly ,Karnataka ,Karnataka Legislative Assembly Elections ,Dharwad District ,BJP ,
× RELATED திறந்தநிலையிலான ‘ஊக்கை’ விழுங்கிய...