×

ரிஷப் பன்ட் போய்… இப்போ ரவீந்திர ஜடேஜா மிகவும் செக்ஸியான நடிகை ஊர்வசி ரவுடேலா: கிரிக்கெட் வீரரின் பதிலால் அதிர்ச்சி

மும்பை: மிகவும் செக்ஸியான நடிகை ஊர்வசி ரவுடேலா என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கூறிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இவருக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்டுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் தற்போது மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, நடிகை ஊர்வசி ரவுடேலா குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரவீந்திர ஜடேஜாவிடம், ‘பாலிவுட் நடிகைகளில் யார் மிகவும் செக்ஸியாக உள்ளார்கள்?’ என்று நிருபர் கேட்டார். அதற்கு அவர், ‘ஊர்வசி ரவுடேலா தான்’ என்றார். ரவீந்திர ஜடேஜாவின் இந்த பதில், சமூக ஊடகங்களில் விவாதப் ெபாருளாக மாறியுள்ளது. ஊர்வசியின் ரசிகர்கள் அவரை புகழ்ந்தும், மற்றும் சிலர் ரிஷப் பன்ட் குறித்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

The post ரிஷப் பன்ட் போய்… இப்போ ரவீந்திர ஜடேஜா மிகவும் செக்ஸியான நடிகை ஊர்வசி ரவுடேலா: கிரிக்கெட் வீரரின் பதிலால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pant ,Rabindra Jadeja ,Purvasi Rawudela ,Mumbai ,Rawindra Jadeja ,Varvasi Rawudela ,Rishop Punt ,Urvashi Rawudela ,Dinakaran ,
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...