×

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அரசு உறுதி: நொச்சிக்குப்பம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை திரும்பப் பெற்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அரசு உறுதியளித்த நிலையில் மீனவர்கள் அறிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 12ம் தேதி நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன்கடைகள், உணவகங்கள் அகற்றப்பட்டன. மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராடி வந்தனர்.

வழக்கம் போல் மீன் கடைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மீனவர்கள் நலன் கருதி மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கிழக்குப்பக்கம் வியாபாரம் செய்ய நீதிமன்றம் தெரிவித்தபடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. மேற்கு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறின்றி மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. சாலையில் போடப்பட்டிருந்த தற்காலிக கூரைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அரசு உறுதி: நொச்சிக்குப்பம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nochikuppam ,Dinakaran ,
× RELATED பிஸ்கட் போட்டு விளையாடிய போது தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்