×

ஐஐடி-க்களில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது: ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: ஐஐடி-க்களில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஐஐடி-க்களில் மாணவர்கள் தற்கொலையானது கவலையளிக்கும் விதமாக இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 33 மாணவர்கள் பல்வேறு ஐஐடி-க்களில் தற்கொலை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் 2 மாணவர்கள், மும்பையில் 1 மாணவர் தற்கொலை மேற்கொண்டது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இச்சூழலில் நேற்று ஐஐடி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்; “ஐஐடி-க்களில் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டும், பாகுபாடு காரணமாக மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது என்ற குற்றசாட்டு எழுகிறது, ஆகவே ஐஐடி-க்களில் எவ்வித பாகுபாடும் இருக்க கூடாது, மாணவர்கள் மனஅழுத்தமின்றி பயில்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகங்கள் எடுக்க வேண்டும், மாணவர்கள் மனஅழுத்தமின்றி இருப்பதற்காக உதவி செய்ய தனியாக மையங்கள் அமைப்பதற்கும், பேராசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து அவர்களின் மனஅழுத்தத்தை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இது 55-வது ஐஐடி கவுன்சில் கூட்டமாகும். இதற்கு முன் கடந்த 5 ஆண்டுகளில் 2544 ஓபிசி மாணவர்கள், 1362 எஸ்சி மாணவர்கள் மற்றும் 538 எஸ்டி மாணவர்கள் ஆகியோர் பல்வேறு ஐஐடி-க்களில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி வெளியேறியுள்ளனர் என்பது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

எனவே இதற்கு இடம் கொடுக்க கூடாது எனவும் மாணவர்களின் மனஅழுத்தத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களின் தாய் மொழியிலேயே படிப்பதற்கான வழிமுறைகளை ஐஐடி-க்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஐஐடி-க்களில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது: ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் appeared first on Dinakaran.

Tags : Union Education Minister ,Darmendra Pradhan ,Delhi ,IIT ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...