×

மேட்டுப்பாளையத்தில் செண்டுமல்லி விவசாயம் தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கிட்டம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செண்டுமல்லி பூ அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறுகிய காலம் அதாவது மூன்று மாத கால பயிரான இதற்கு தண்ணீர் 8 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சினால் போதுமானது. தற்போது, தமிழகத்தில் கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெப்பத்தின் அளவு 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து, விவசாயிகள் மாற்று யோசனையாக தண்ணீரை குறைவாக உட்கொள்ளும் பயிர்களை நடவு செய்து அதன்மூலம் லாபம் ஈட்டி வருகின்றனர்.

குறிப்பாக, குறுகிய கால மூன்று மாத பயிரான செண்டு மல்லி பூவினை விதைத்து அறுவடை செய்து வருகின்றனர். இந்த பூச்செடிகளுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விலையும் கிலோவிற்கு ரூ.60 முதல் ரூ.70 வரை கிடைத்து வருகிறது.கிட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில்,“தனது தோட்டத்தில் குறுகிய கால பயிரான செண்டு மல்லி பூச்செடிகளை வளர்த்து வருகிறேன். மூன்று மாத காலத்திற்குள் எட்டு முறை அறுவடை செய்யலாம். அதிகபட்சமாக எட்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதும். மேலும், பூவின் விலையும் ரூ.60 முதல் ரூ.70 வரை கிடைத்து வருவதால் குறைந்த அளவிலான லாபமும் கிடைத்து வருகிறது. கோடை காலங்களில் விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும். இதனை ஈடுகட்டும் வகையில் தண்ணீரினை அளவாக உட்கொள்ளும் செண்டுமல்லி உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதன் மூலம் லாபம் ஈட்டலாம்.

The post மேட்டுப்பாளையத்தில் செண்டுமல்லி விவசாயம் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ethupupam ,Mattupalayam ,Madupalayam ,Kitambalayam ,Kurumpanur ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இருந்து...