×

கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரை பொங்கி வரும் கழிவுநீர்: உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..!!

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன கழிவு நீர் துறுநாற்றத்துடன் நுரை பொங்கி வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, அங்குள்ள வர்தூர் ஏரி வழியாக பெங்களூரு பெருநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்தும், தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது.

கோடை காலத்தில் முதல் முறையாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ரசாயன நுரைகள் வெந்நிறத்தில் பொங்கி செல்கிறது. கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து ரசாயன நுரையுடன் கூடிய தண்ணீர் வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரை பொங்கி வரும் கழிவுநீர்: உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli dam ,Krishnagiri District Hosur ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...