×

3 தமிழர்களுக்கு அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான அறிவிப்பில் கையெழுத்திட்டார் அதிபர் பைடன்..!!

வாஷிங்டன்: அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய 3 தமிழர்களுக்கு அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

டல்லாஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் விசி 3 பேருக்கும் இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அமெரிக்க விருதை பெற்ற 3 தமிழர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.

The post 3 தமிழர்களுக்கு அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான அறிவிப்பில் கையெழுத்திட்டார் அதிபர் பைடன்..!! appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Bidon ,Washington ,Harvard Tamil Seat Intl ,Baidan ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு