×

கடல் மேற்பரப்பு வெப்பம் வரலாறு காணாத வகையில் 21 டிகிரி உயர்வு : பருவமழையின் அதீத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு என ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

டெல்லி : கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சராசரியாக 21 டிகிரி செல்ஷீயஸ் அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மைனே பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்ற நிறுவனம் உலக அளவில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, வரலாற்றில் இல்லாத வகையில் சராசரியாக 21.1 டிகிரி செல்ஷியஸ் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இந்திய பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 29 முதல் 31 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்கு அரேபிக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலிலும் 30 டிகிரி செல்ஷியஸ் வரை மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் பருவமழை தாமதமாகவோ அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை அதிகளவில் பெய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மேலும் பவளப்பாறைகள் , மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடல் மேற்பரப்பு வெப்பம் வரலாறு காணாத வகையில் 21 டிகிரி உயர்வு : பருவமழையின் அதீத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு என ஆய்வாளர்கள் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...