×

அழகர்கோவில் உபகோயில்களில் 11 லட்சம் உண்டியல் வசூல்

அழகர்கோவில், ஏப். 19: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உபகோயில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில், தல்லாகுளம் ஐயப்பன் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.11 லட்சத்து 13 ஆயிரத்து 724 இருந்தது. தங்கம் 22 கிராமும், வெள்ளி 15 கிராமும் இருந்தது. இந்த உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோயில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் சுரேஷ்,வடக்கு ஆய்வர் ஜெயலட்சுமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் அருள் செல்வன், மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அழகர்கோவில் உபகோயில்களில் 11 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.

Tags : Ubagoils ,Anagargo ,Aunagargo ,Madurai ,Dallagulam Prasanna Venkadasalapati Perumal Temple ,Kalluzagar Temple ,Anagargo, Madurai District ,
× RELATED அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா: முழுவீச்சில் தயாராகும் தேர்