×

மதுப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, ஏப்.19: ஈரோட்டில் மதுப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இப்பேரணி காந்திஜி ரோடு அருகே தொடங்கி கால்நடை மருத்துவமனை சாலை வழியாக ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இப்பேரணியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்போம், கள்ளச்சாராயம் அருந்துவது உடல் உறுப்புகளை செயலிழக்க செய்யும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளை ஏந்திச்சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியில் உதவி ஆணையர் (கலால்) சிவகுமரன், கோட்ட கலால் அலுவலர் குமரேசன், ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணி, மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ரா, காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் உட்பட மாணவ, மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மதுப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Erode ,Prohibition ,Anti-Alcoholic Department ,Dinakaran ,
× RELATED உள்ளூர் பார்க்கிங் தளங்களை...