×

சென்னையில் நடக்கும் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,ஏப்.19: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சாராஸ் மேளா விற்பனை கண்காட்சியில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். 2023-2024ம் ஆண்டு சாராஸ் மேளாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் மாநில அளவிலான விற்பனை கண்காட்சி சென்னை தீவுத்திடலில் வரும் 29ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களான பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள், பரிசுப்பொருட்கள், மெழுகுவர்த்தி, வீட்டில் செய்யப்படும் சாக்லெட், இனிப்பு பொருட்கள், மண் பானைகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குத்தல் அரிசி, ஊறுகாய், வற்றல், வடகம், பனை வெல்லம், மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள், மீன் ஊறுகாய் போன்றவை விற்பனை செய்யப்படவுள்ளது.

எனவே மாநில அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்ள தகுதியான மற்றும் விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்வு செய்ய மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் பங்கு பெற உற்பத்தி பொருட்களுடன் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் நடக்கும் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Women SHGs ,Chennai ,Nagapattinam ,Saras Mela sales fair ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...