×

கேரள மாணவி பலாத்காரம்8 மாதங்களுக்குபின் புகார்

புதுச்சேரி, ஏப். 19: புதுவையில் காதலனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த முதுநிலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரம், கர்ணாபேட், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சொக்கநாதன் (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்தாண்டு எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அப்போது முதுநிலை கல்வி தொடர்பான செயல்முறை பயிற்சிக்காக புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்திருந்தார். அப்போது கேரளாவைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி 2ம் ஆண்டு பயின்ற நிலையில் அவரும் செயல்முறை பயிற்சிக்காக தேங்காய்திட்டு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சொக்கநாதனுக்கும், அம்மாணவிக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் போனில் அவ்வப்போது பேசி வந்தார்களாம். இதனிடையே முதுநிலை படிப்பை முடித்த அம்மாணவி, கர்நாடகா மாநிலம் பெங்களூர், செம்ராஜ்பேட் பகுதியில் பெற்ேறாருடன் தங்கியிருந்த நிலையில், கடந்தாண்டு ஜூலையில் புதுச்சேரி வந்துள்ளார். அப்போது காதலன் சொக்கநாதனும் புதுச்சேரி வந்த நிலையில் இருவரும் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது காதலியிடம் திருமண ஆசைவார்த்தைகளை கூறி சொக்கநாதன் அவருடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் இருவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில், சொக்கநாதனுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து திருமணத்தை முடித்த நிலையில் இவ்விவகாரம் குறித்து தகவல் கிடைக்கவே காதலி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சொக்கநாதன் மீது பெரியகடை காவல் நிலையத்தில் நேற்று அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ வீரபத்திரன் தலைமையிலான போலீாசார், பலாத்காரம் செய்தல் பிரிவின்கீழ் சொக்கநாதன் மீது வழக்குபதிந்து அவரை தேடி வருகின்றனர். சொக்கநாதனை கைது செய்ய தனிப்படை கடலூர் விரைந்துள்ளதாக தெரிகிறது.

The post கேரள மாணவி பலாத்காரம்
8 மாதங்களுக்குபின் புகார்
appeared first on Dinakaran.

Tags : Kerala ,Puducherry ,Puduvai.… ,Dinakaran ,
× RELATED வயநாடு அருகே கேரள அரசு அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்