×

டெக்ஸ்கோ சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு ரூ.43,00,735 நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

சென்னை: தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ரூ.43,00,735 நிதி வழங்கப்பட்டது. ரூ.43,00,735க்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (18ம் தேதி) தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (டெக்ஸ்கோ) 2021-22ம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து ரூ.43,00,735க்கான காசோலையை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) செயல்பட்டு வருகிறது. இக்கழகம், முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரர்களை பல்வேறு ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஏனைய வாரியங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், இளநிலை உதவியாளர்கள், தொலைபேசி இயக்குபவர்கள், சுற்றுலா காவலர்கள், செவிலிய உதவியாளர்கள், தீயணைப்பாளர்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், காப்பாளர்கள் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி மறுவேலைவாய்ப்பு வழங்கும் “மனித வள முகமையாக” செயல்பட்டு வருகிறது.

தற்போது, 8,226 முன்னாள் படைவீரர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் 2021-22ம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 லட்சத்து 735 ரூபாய்க்கான காசோலை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, சிறப்புச் செயலாளர் கலைஅரசி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post டெக்ஸ்கோ சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு ரூ.43,00,735 நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : CM G.K. ,Stalin ,Chennai ,School ,Former Veterans Corporation ,Tamil ,Nadu ,TEXCO ,CM G.K. Stalin ,
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...