×

14 மாவட்டங்களில் 100 டிகிரி வாட்டியது: 3 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை: தமிழ்நாட்டில்நேற்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்றும் ஈரோட்டில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக கரூர், ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக 5 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், சென்னை, கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தும் காணப்பட்டது. அதேபோல 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் நிலவியது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 22ம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ்வரை அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post 14 மாவட்டங்களில் 100 டிகிரி வாட்டியது: 3 நாட்களுக்கு வறண்ட வானிலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Erode ,
× RELATED ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல்