×

பேரவையில் அமைச்சர் நாசர் பதில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா?

நேரமில்லா நேரத்தில் கே.பி.முனுசாமி (அதிமுக), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பிரின்ஸ் (காங்கிரஸ்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பாகவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். பதில் அளித்து அமைச்சர் நாசர் பேசியதாவது: கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றிற்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 என கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 1 கோடியே 5 லட்சம் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்கள் சேவைக்காக அரசு அதை தொடர்ந்து வருகிறது.

பசும்பால் லிட்டருக்கு ரூ.35ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 வீதம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7 உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தற்போது பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து பால் வழங்கி வருகிறார்கள். இங்கே உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கான அரிய வகை நோய் பல மாநிலங்களில் பரவி வருகிறது. தமிழகத்திற்குள் பரவாமல் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

The post பேரவையில் அமைச்சர் நாசர் பதில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Minister ,Nasser ,Assembly ,KP ,Munuswamy ,AIADMK ,Chinnadurai ,Marxist Communist ,Prince ,Congress ,Ramachandran ,Communist of India ,Easwaran ,Komadeka ,Nassar ,Dinakaran ,
× RELATED சொந்தக் கட்சியினரே கடும் எதிர்ப்பு;...