×

பிரசவத்தின்போது ஏற்படும் தாயின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் வேண்டும்: விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விராலிமலை விஜயபாஸ்கர் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 54 பேர் மட்டுமே உயிரிழக்கும் சூழலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இது 50ஆக குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரசவ உயிரிழப்பு 52.3 ஆக குறைக்கப்பட்டது.
விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சி காலத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கலைஞர் முதல்வராக இருந்தபோது 2008ம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆணையம் அமைத்தார். செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் ஹித்தேந்திரன் சாலை விபத்தில் மூளைசாவு அடைந்தார். அவரது உடல் தானமாக வழங்கப்பட்டு 5, 6 உயிர்கள் பிழைக்க காரணமாக இருந்தார். ஏதோ அதிமுக ஆட்சியில்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டதாக சொல்வது முறையல்ல. முதல்வர் மு.க.ஸ்டாலின மற்றும் அவரது மனைவியும் தங்களது உடலை தானமாக வழங்கி, இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளனர்.
விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சியில் 6 ஆண்டுகளாக மருத்துவ துறை முதலிடத்தில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அதை விட்டு விட்டீர்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகம் தற்போது பின்னடைவில் இல்லை.

The post பிரசவத்தின்போது ஏற்படும் தாயின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் வேண்டும்: விஜயபாஸ்கர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Viralimalai Vijayabaskar ,ADMK ,Legislative Assembly ,AIADMK ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்