×

சென்னை மெரினா கடற்கரையில் கல்லீரல் விழிப்புணர்வு மணல் சிற்பம்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, புகழ் பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் உடன் அப்போலோ மருத்துவமனை இணைந்து சிறப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எழிலன் எம்.எல்.ஏ, அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரித்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி ஆகியோர் முன்னிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், ‘‘உடலில் மூளைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய உறுப்பு கல்லீரலாகும். அதனால் கல்லீரல் ஆரோக்கியத்தில் வாழ்க்கை முறையின் பங்கு, ஆரோக்கியமான வாழ்க்கை தரத்தில் ஆரோக்கியமான கல்லீரல் ஏற்படுத்தும் மாறுபாடு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களின் பல்வேறு அம்சங்களை குறித்த அறிவும் விழிப்புணர்வும் மக்களுக்கு தேவையாக உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம், கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்’’ என்றார்.

The post சென்னை மெரினா கடற்கரையில் கல்லீரல் விழிப்புணர்வு மணல் சிற்பம்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai Marina beach ,Minister ,Udayanidhi ,Chennai ,World Liver Day ,Apollo Hospital ,Sudarsan Patnaik ,
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...