×

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

பொன்னேரி: ஆந்திராவில் இருந்து மீஞ்சூர் பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதை பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தூர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், மீஞ்சூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா எனும் போதை பொருளை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மீஞ்சூர் பகுதியில் உள்ள பாலாஜி ஒட்டல் அருகே கஞ்சா விற்பனையை தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நேற்று மீஞ்சூர் பாலாஜி ஓட்டலுக்கு வரும்போது மடக்கி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ 132 கிராம் எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை கடத்தி வந்த ஒடிசா வாலிபரை செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் முனியசாமி மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர், மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர். இதில், கஞ்சா வியாபாரி அத்திப்பட்டு புதுநகர், மீஞ்சூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஒடிசா வாலிபர் கலிமேலன் (30) கைது செய்யப்பட்டு, பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தினர். புழல் சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Andhra ,Meenjoor ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில்...