×

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பி.எஸ்.என். நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளையபாரதி(28). ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். இளையபாரதி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த ஒரு மாதமாக பணி சுமை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் விரக்தி அடைந்த இளையபாரதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பணி சுமையால் தற்கொலையா? அல்லது குடும்பத் தகராறு காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Veppampat ,Thiruvallur ,Veppampatu ,Ilayabharati ,Nagar ,Vepampat ,Tiruvallur ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி