×

புல்வாமா தாக்குதல் பற்றி வெள்ளை அறிக்கை: அரசுக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும்படி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஜெய்ஷ் இ தீவிரவாத தாக்குதலில்சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, காஷ்மீர் முன்னாள் துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக், ஒன்றிய அரசின் அலட்சியத்தால் புல்வாமா தாக்குதல் நடந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி வைரலானது. இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கர்னல் ரோகித் சவுத்ரி, ஓய்வுபெற்ற விங் கமாண்டர் அனுமா ஆச்சார்யா செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர்.

அப்போது, அவர்கள் அரசுக்கு இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோகில், “சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர் விமானத்தில் செல்ல ஏன் அனுமதிக்கப்படவில்லை? ஜனவரி 2, 2019 மற்றும் பிப்ரவரி 13, 2019 உளவுத்துறை அளித்த தீவிரவாத தாக்குதல் குறித்த அறிக்கைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன? தீவிரவாதிகள் 300 கிலோ வெடிமருந்து எங்கிருந்து வாங்கினார்கள்? மிகுந்த பாதுகாப்புக்கு இடையே வெடிமருந்து எப்படி புல்வாமா-அனந்த்நாக்-அவந்திபோர வழியாக கடத்தப்பட்டது? இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.

The post புல்வாமா தாக்குதல் பற்றி வெள்ளை அறிக்கை: அரசுக்கு காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pulwama ,Congress ,New Delhi ,Congress party ,Union government ,Pulwama attack ,Dinakaran ,
× RELATED அரசியல் களத்தில் பொய்களை கூறுவதால்...