×

2250 ஏக்கரில், ரூ.4000 கோடி மதிப்பில் சபரிமலை அருகே புதிய ஏர்போர்ட்: பிரதமர் மோடி டிவிட்

திருவனந்தபுரம்: சபரிமலை அருகே எருமேலியில் புதிதாக கிரீன்பீல்ட் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி டிவிட் மூலம் வரவேற்றுள்ளார். உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களது வசதிக்காக அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து ஒன்றிய அரசும், கேரள அரசும் இணைந்து புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது. இதற்காக கேரள தொழில் வளர்ச்சிக்கழகம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதற்கட்டமாக எருமேலி, மணிமாலா கிராமத்தில் புதிதாக கிரீன்பீல்ட் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து கழக அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. கோட்டயம் கிரீன்பீல்ட் விமான நிலையம் 2250 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 4000 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம் உருவாக உள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி நேற்று டிவிட் செய்துள்ளார். அதில்,’ சபரிமலை அருகே புதிய விமானநிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சுற்றுலா வளர்ச்சிக்கும், குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவிற்கும் சிறந்த செய்தி’ என்று டிவீட் செய்துள்ளார்.

The post 2250 ஏக்கரில், ரூ.4000 கோடி மதிப்பில் சபரிமலை அருகே புதிய ஏர்போர்ட்: பிரதமர் மோடி டிவிட் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,PM Modi ,Thiruvananthapuram ,Erumeli ,Modi ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...