×

யமஹா எம்டி15 வி2

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், எம்டி-15 வி2 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.1,64,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் ஒய் கனெக்ட் என 2 வேரியண்ட்களில், 6 வண்ணங்களில் இது கிடைக்கும். இரட்டை டிஆர்எல்களுடன் கூடிய புரொஜெக்டர் வகை ஹெட்லாம்ப், பின்புறம் உயரமான சீட், இன்ஜின் கவுல், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன.

இதில் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள 155 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 18.1 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒய் கனெக்ட் வேரியண்ட்டில் புளூடூத் மூலம் மொபைலை இணைத்துக் கொள்ளலாம். அழைப்புகள், எஸ்எம்எஸ், இமெயில், கடைசியாக பார்க்கிங் செய்த இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

The post யமஹா எம்டி15 வி2 appeared first on Dinakaran.

Tags : Yamaha ,Yamaha Motor India ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...