×

பாஜகவில் இருந்து மீண்டும் திரிணாமுல் திரும்பிய ஒன்றிய மாஜி அமைச்சர் மாயம்: மகன் பரபரப்பு புகார்

கொல்கத்தா: பாஜகவில் இருந்து மீண்டும் திரிணாமுல் திரும்பிய முன்னாள் அமைச்சர் முகுல் ராய் மாயமானதாக அவரது மகன் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் முன்னாள் ரயில்வே அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த முகுல் ராய், கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடுகளால் கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவியை பாஜக தலைமை வழங்கியது.

கடந்த 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் முகுல் ராயின் மகன் சுப்ரஷூ தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘எனது தந்தையை நேற்று மாலை முதல் (திங்கள்) காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை’ என்றார். அதேநேரம் தனது இரண்டு நெருங்கிய உதவியாளர்களுடன் முகுல் ராய் டெல்லிக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் டெல்லி விமான நிலையத்தில் நேற்றிரவு 9 மணியளவில் கொல்கத்தா விமானம் தரையிறங்க வேண்டும். ஆனால் அங்கேயும் அவர் செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

The post பாஜகவில் இருந்து மீண்டும் திரிணாமுல் திரும்பிய ஒன்றிய மாஜி அமைச்சர் மாயம்: மகன் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Maaji ,Trinamool ,bajka ,Kolkata ,Former minister ,Mugul Rai ,Bajaka ,Union Maji ,Minister ,Trinamul ,Dinakaran ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...