×

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ.க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை: குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரல் வீடியோவில் இருந்தது என்ன?மதுரையை சேர்ந்தவர் பரம சிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட் டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சிசப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் . ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர். தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.

The post குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ.க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Bennalurpet Training SI ,Chennai ,Tamil ,Nadu ,M.K.Stalin ,Paramasivam ,
× RELATED தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ...