×

மக்களவை தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு!!

டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசினார். மும்பையில் நடந்த இந்த சந்திப்பில் பாஜக அரசை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டி அளித்த கே.சி.வேணுகோபால், சிவசேனாவுக்கும் தேசிய வாத காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வெவ்வேறு சித்தாதங்கள் இருந்தாலும் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளே 3 கட்சிகளுக்கும் தற்போது முக்கியம் என்று தெரிவித்தார்.

விரைவில் உத்தவ் தாக்கரேவை சந்திக்க ராகுல் காந்தி மும்பை வர உள்ளதாகவும் கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டார். காங்கிரஸ், சிவசேனா உறவு என்பது நட்பு அல்ல என்றும் அது உறவின் முறை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஒருபுறம் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த வாரம் தேஜஸ்வி யாதவுடன் ராகுலை சந்தித்தார். பின்னர் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். தற்போது உத்தவ் தாக்கரே, கே.சி.வேணுகோபால் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. மராட்டியத்தில் கடந்த முறை கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களவை தேர்தலில் ஒன்றிணைவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

The post மக்களவை தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : KC Venugopal ,Shiv Sena ,Uddhav Thackeray ,Lok Sabha ,Delhi ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள்,...