×

கடலூர் அருகே அழகர் சித்தர் கோயிலில் சித்திரைத் திருவிழா: 108 தவில், நாதஸ்வரம் கலைஞர்கள் சேர்ந்திசைக் கச்சேரியுடன் விமரிசை

கடலூர்: கடலூர் அருகே அழகர் சித்தர் ஆலயத்தில் 108 தவில் மற்றும் நாதஸ்வரம் வாத்தியங்களை வாசித்து திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோயில் உள்ளது. அந்த கோயிலின் பின்பகுதியில் அழகர் சித்தர் கிணற்றில் ஜல சமாதி அடைந்துள்ளார். இந்த கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதையொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

அழகுமுத்து அய்யனார் மற்றும் அழகர் சித்தர் சன்னதி பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவத்தில் 108 தவில் மற்றும் நாதஸ்வரம் கலைஞர்களின் சேர்ந்திசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கடலூர் அருகே அழகர் சித்தர் கோயிலில் சித்திரைத் திருவிழா: 108 தவில், நாதஸ்வரம் கலைஞர்கள் சேர்ந்திசைக் கச்சேரியுடன் விமரிசை appeared first on Dinakaran.

Tags : Chitrait Festival ,Alaghar Siddhar Temple ,Cuddalore ,Nathaswaram ,Thirukalyanam festival ,Thavil ,Chitira festival ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயில்...