×

ஹரியானா மாநிலம் கர்னலில் 3 மாடி அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

கர்னால்: ஹரியானா மாநிலம் கர்னலில் 3 மாடி அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் மாவட்டத்தில் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் அரிசி ஆலை இயங்கி வந்தது. தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்ததும் அரிசி ஆலைக்குள் தூங்குவது வழக்கம். நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் ஆலையில் அவர்கள் தங்கும் தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் இந்த கட்டடம் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

The post ஹரியானா மாநிலம் கர்னலில் 3 மாடி அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karnal, Haryana Karnal ,Haryana ,Karnal ,Karnal, Haryana ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்..!!