
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், அருமை சகோதரர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் தந்தை திரு.தவசிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவிப்பத்தோடு , அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dinakaran.

